Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வேயில் 1104 அப்ரன்டிஸ்கள் :ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 1104.

வயது: 12.06.2024 தேதியின்படி 15 முதல் 24க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகளில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Electrician/Fitter/Plumber/Painter/Welder (Gas & Electric)/Diesel Mechanic/Machinist/Trimmer/Turner/Carpenter ஆகிய டிரேடுகளில் பயிற்சியளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களில் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயி்ல்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.ner.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 11.07.2024.