Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை: காரணமான நபரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிய போலீஸ்!!

சென்னை: ஓடும் ரயிலில் பெண் மென்பொறியாளரை கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர். கேரளாவின் பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த விரைவு ரயில் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் கரூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் S9 பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அந்த விரைவு ரயில் 26ம் தேதி அதிகாலை 2 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தை நெருங்கியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐடி பெண் ஊழியரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடியதாக கூறப்படுகின்றது. அந்த நபரை பெண் விரட்டி சென்ற நிலையில், தயாராக கழிவறை கதவை திறந்திருந்த ஒரு நபர் அந்த இளம்பெண்ணை உள்ளே இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. அந்த நபரை தொடர்ந்து செல்போனை பறித்து சென்ற நபரும் கழிவறைக்கு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு ஓடும் ரயிலில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் மென்பொறியாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. கரூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் பெயர், அட்டவணை பட்டியலையும் கேட்டு பெற்று அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மென்பொறியாளருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட திரவ மாதிரியை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை பாலியல் வான்கொடுமை செய்ததாக கூறப்படும் நபரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது. அவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்து விட்டு திடீரென அந்த படத்தை நீக்கியுள்ளது.