*குழந்தை, மாற்றுத்திறனாளிகள் அச்சம்
கந்தர்வகோட்டை :கந்தர்வகோட்டையில் கடைவீதிகளில் சுற்றி திரியும் நாய்களால் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகருக்கு உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் ஆயிரக்கணையில் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் தெரு நாய்கள் கடைவீதிகளிலும்,தெருக்களிலும் சுற்றுகிறது.
இவைகள் வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது வழிப்போக்கர்களை கடித்து விடுவதால் இப்பகுதி அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நாய்கடி ஊசி போடபடுகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது குறுக்கே நாய்கள் செல்லுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.
இப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு - குழந்தைகளுக்கும் நாய்களால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. எனவே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை உயர்நீதிமன்ற உத்தரவின்படி எண்ணிக்கைகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
சமீபத்தில் துருசுப்பட்டி கிராமத்திலும், கல்லா கோட்டை கிராமத்திலும் வீட்டில் இருந்தவர்களை நாய்கள் கடித்து இவர்கள் கந்தர்வகோட்டை அரசு மருந்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் நாய்களுக்கு எதோ மர்ம நோய் ஏற்பட்டு வாயில் இருந்து உமிழ்நீர் தெருக்களில் சிந்துவதால் குழந்தைகளுக்கு எதேனும் நோய் வருமோ என பெற்றோர்கள் அச்சம் அடைகிறார்கள் எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடி நடைவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

