சென்னை: சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.சின்னசாமி மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்களில், தி.மு.கழக உறுப்பினராகத் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் வென்றவரும், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டக் கழகத்தின் முன்னாள் செயலாளருமான ஆர். சின்னசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
சின்னசாமி மூன்று முறை தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும் பணிகளை ஆற்றியவர். மூத்த முன்னோடியாக, முதுபெரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருந்து, நமக்கு வழிகாட்டிய ஆர். சின்னசாமி மறைவு தருமபுரி மக்களுக்கும் கழகத்துக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். கழகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திறன்கள் தெரிவித்தார்.