Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் எலிசபெத் ராணி கொடுத்த ஏர் பைப் ஆர்கன் இசைக்கருவி 140 ஆண்டுகளாக பராமரிப்பு

குன்னூர் : ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் எலிசபெத் ராணி கொடுத்த ஏர் பைப் ஆர்கன், 140 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் பகுதியில் கிழக்கு இந்திய கம்பெனி காலகட்டத்தில் கடந்த 1885ம் ஆண்டு ராணுவ வீரர்களுக்காக புனித ஜார்ஜ் காரிசன் தேவாலயம் துவங்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் ஆலயத்தில் உள்ள இருக்கைகள் முதல் அனைத்து பொருட்களும் தேக்கு மரங்களால் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. இந்த ஆலயம் அமைக்க கிழக்கு இந்திய கம்பெனி சார்பில் அப்போதைய கணக்கீட்டின் படி ரூ.27ஆயிரம் செலவிடப்பட்டது. இந்த ஆலயத்தின் மேல் பகுதியில் உள்ள ஆலய மணியின் எடை ஒரு டன் என கூறப்படுகிறது.

குன்னூரிலேயே இன்று வரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போது வடிவமைக்கப்பட்டு பழமை மாறாமல் பராமரிக்கப்படும் ஒரே ஆலயம் பேரக்ஸ் பகுதியில் உள்ள ஆலயம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல், காற்றின் மூலம் இசைக்ககூடிய ஏர் பைப் ஆர்கன் என்கிற இசைக்கருவியும் இந்த ஆலயத்தில் உள்ளது. 570 குழாய்கள் மூலம் இசைக்க கூடிய இந்த கருவியை, இந்த ஆலயத்திற்கு அனுப்புவதற்கான முழு செலவையும், எலிசபெத் ராணி பொறுப்பேற்றுக் கொண்டு அதற்கான பொருட்களை கப்பல், ரயில் மற்றும் மாட்டு வண்டிகளின் உதவியுடன் கடந்த 140 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனிலிருந்து அனுப்பி வைத்துள்ளார். இங்கு பொருத்தப்பட்டுள்ள ஏர் பைப் ஆர்கன் குழாய்கள் அனைத்தும் யானை தந்தங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்போது பைப் ஆர்கனை வாசிப்பதற்காக மின் வசதி இல்லாததால் இதில் வாசிக்க உதவ பிரத்யேக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு சைக்கிள் பம்புகளை வைத்து காற்றை நிரப்பி உதவினர். பின்னர், மின் வசதி வந்தவுடன் அதன் மூலம் காற்று சென்று ஒலி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் மற்றும் ஏர் பைப் ஆர்கன் இங்கு மட்டுமே இன்று வரை முறையாக செயல்படுத்தப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை விட்டு வெளியேறும் போது இந்த ஆலயத்தை சிஎஸ்ஐ நிர்வாகத்திடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். இதே போல், காலில் ஆர் மோனியம் வாசிக்கும் கருவியும் அந்தக் காலத்தில் ரூ.300 செலவில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த ஆர்மோனியம் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள அனைத்து பொருட்களும் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பழமை வாய்ந்த ஆலயம் மற்றும் அங்குள்ள இசைக்கருவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பழமைமாறாமல் இன்று வரை ராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாத்து வருகின்றனர். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை விட்டு வெளியேறும் போது இந்த ஆலயத்தை சிஎஸ்ஐ நிர்வாகத்திடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். இதே போல், காலில் ஆர் மோனியம் வாசிக்கும் கருவியும் அந்தக் காலத்தில் ரூ.300 செலவில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த ஆர்மோனியம் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.