துபாய்: கத்தார் நாட்டின் மீது மற்ற நாடுகள் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த மாதம் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த திங்கள்கிழமை(செப்.29) வாஷிங்டன் சென்றிருந்தார். அப்போது, கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியிடம் நெதன்யாகு மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் வௌ்ளை மாளிகை வௌியிட்டுள்ள அறிக்கையில், “கத்தாரில் உள்ள பகுதிகள், இறையாண்மை, அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால் அது அமெரிக்கா மீதான தாக்குதலாக கருதப்படும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.