கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு, கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. இப்போட்டியில் பிரிட்டன் வீரர் ஜேக் அலெக்சாண்டர் டிரேப்பர், ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ஆண்ட்ரெயெவிச் ரூப்லெவ் மோதினர். முதல் இரு செட்களில் இரு வீரர்களும் தலா ஒன்றை கைப்பற்றினர். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை எவ்வித சிரமமும் இன்றி ரூப்லெவ் கைப்பற்றினார். இதனால் 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் ரூப்லெவ் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Advertisement


