சென்னை: புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மகளிர் சிறையில் கொலை, கொள்ளை வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைதான 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ என்ற பெண் கைதியிடம், நீதிமன்ற உத்தரவின்பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். சிறை வளாகத்திற்குள் வெளிநாட்டு பெண் கைதி ஒருவரிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement