சென்னை: புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி புஷ்பராஜ், குடும்பத்தினர் சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இலங்கையில் உள்ள தனது தாய் உடன் தொலைபேசி மூலம் பேச முறையாக அனுமதிக்கவில்லை. சிறைகளில் உள்ள வெளிநாட்டினர் தங்களது குடும்பத்தினரை சந்திக்க, தொலைபேசி மூலம் பேச விதிகள் உள்ளன என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement

