Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புஸ்ஸி ஆனந்த் மீது போலீஸ் வழக்கு

திருச்சி: தவெக தலைவர் விஜய் வரும் 13ம்தேதி திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இதற்கு அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிப்பதற்காக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 6ம்தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.இதனையடுத்து திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தவெகவினர் வாகனங்களை நிறுத்தினர். இதனால், வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தது, போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததும் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 பேர் மீது நேற்று திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.