உயிர்ச் சேதம் ஏற்படும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளரை எச்சரித்தோம்: எப்.ஐ.ஆர் தகவல்
நாமக்கல்: உயிர்ச் சேதம் ஏற்படும் என தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் சதீஷை எச்சரித்தோம் என எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் தவெக நிர்வாகிகள் சொன்னதை கேட்கவில்லை. அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல், கொடுங்காயம், உயிர்ச்சேதம் ஏற்படும் என எச்சரித்தோம் என நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியிட்டது.