Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரோகபடி லீக் 12வது சீசன்: இன்று விசாகப்பட்டினத்தில் தொடக்கம்; முதல் ஆட்டத்தில் தலைவாஸ்-டைடன்ஸ் மோதல்

விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் போட்டியின் 12வது தொடர் இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ் உட்பட 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் தலா 22 ஆட்டங்களில் விளையாடும். இந்த லீக் சுற்றில் அக்.23ம் தேதி வரை 108 ஆட்டங்கள் நடக்கும். இதில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும். லீக் சுற்று ஆட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்பூர், சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டும் நடக்கும். பிளே ஆப் சுற்று ஆட்டங்கள், பைனல் நடைபெறும் தேதிகள், இடங்கள் அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்படும். இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தொடக்கவிழாவின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சாம்பியன்கள் பட்டியல்

ஆண்டு சாம்பியன் 2வது இடம்

2014 ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் யு மும்பை

2015 யு மும்பா பெங்களூர் புல்ஸ்

2016/1 பாட்னா பைரேட்ஸ் யு மும்பா

2016/2 பாட்னா பைரேட்ஸ் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்

2017 பாட்னா பைரேட்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ்

2018 பெங்களூர் புல்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ்

2019 பெங்கால் வாரியர்ஸ் தபாங் டெல்லி

2021 தபாங் டெல்லி பாட்னா பைரேட்ஸ்

2022 ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் புனேரி பல்தன்

2023 புனேரி பல்தன் அரியானா ஸ்டீலர்ஸ்

2024 அரியானா ஸ்டீலர்ஸ் பாட்னா பைரேட்ஸ்

* தலைவாஸ் சாதனை

சென்னைக்கான அணியாக உள்ள தமிழ்)தலைவாஸ் 5வது தொடரில்தான் அறிமுகமானது. இதுவரை விளையாடிய 7 தொடர்களில் 2022ம் ஆண்டு மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அதிகபட்சமாக 4வது இடம் பிடித்தது. எஞ்சிய 6 தொடர்களிலும் தலைவாஸ் முறையே 11, 11, 12, 11,9, 9வது இடங்களையே எட்ட முடிந்தது.

* தமிழ்நாட்டு வீரர்கள்

தமிழ் மண்ணின் விளையாட்டு என்று கபடியை தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் மட்டும் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் புரே கபடியில் விளையாடும் தமிழ்நாட்டு வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த முறை உள்ளூர் அணியான தலைவாஸ் அணயில் தமிழ்நாட்டு வீரர்களே இல்லை. நடப்புத் தொடரில் தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள சில அணிகள்...

பாட்னா பைரேட்ஸ்: எம்.சுதாகர், டி.பாலாஜி

யு மும்பா: எஸ்.முகிலன், சதிஷ் கண்ணன், முகேஷ் கண்ணன்

புனேரி பல்தன்: அபினேஷ் நடராஜன், ஸ்டூவர்ட் சிங்

அரியானா ஸ்டீலர்ஸ்: என்.மணிகண்டன், என்.எஸ்.ஜெயசூர்யா

குஜராத் ஜெயன்ட்ஸ்: வி.அஜித்குமார், ஹரிஷ் காமாட்சி, வி.விஸ்வநாத்

பெங்களூர் புல்ஸ்: தீபக் சங்கர்