Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 190 மேனேஜர்கள்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 190 மேனேஜர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1கிரெடிட் மேனேஜர்: 130 இடங்கள் (பொது-54, ஓபிசி-35, எஸ்சி-19, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-13). சம்பளம்: ரூ.64,820- ரூ.93,960. வயது: 01.09.2025 தேதியின்படி 23 முதல் 35க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2அக்ரிகல்ச்சர் மேனேஜர்: 60 இடங்கள் (பொது-25, ஒபிசி-16, எஸ்சி-9, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-6). சம்பளம்: ரூ.64,820- ரூ.93,960. வயது வரம்பு: 01.09.202523 முதல் 35க்குள். தகுதி: அக்ரிகல்ச்சர்/ஹார்ட்டிகல்ச்சர்/டெய்ரி/அனிமல் ஹஸ்பண்டரி/பாரஸ்டரி/ கால்நடை அறிவியல்/அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு அளிக்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  www.punjabandsindbank.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2025.