பணி: லோக்கல் பேங்க் ஆபீசர்.
மொத்த இடங்கள்: 750- (தமிழ்நாட்டிற்கு 85 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.) (பொது-37, பொருளாதார பிற்பட்டோர்-8, ஒபிசி-22, எஸ்சி-12, எஸ்டி-6).
வயது: 01.08.2025 தேதியின்படி 20 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும். தேதி, மையம் பற்றி விவரம் அடங்கிய அட்மிட் கார்டு இ. மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.punjabandsindbank.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (04.09.2025).