இந்தியா -பாகிஸ்தான் மோதலின்போது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்கள் மீது பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள கணேஷேவாலா ஜூக்கா கிராமம் அருகே டிரோன் பாகங்கள், கைத்துப்பாக்கிகள், ஒரு நாளிதழ் ஆகியவற்றை எல்லை பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement