காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!!
சென்னை : காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்கவிழாவில் விருந்தினராக பங்கேற்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ஆக.26ல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது என்றும் காலை உணவு திட்டம் மூலம் இனி 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.