Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஃபர் மீன் (Puffer Fish)

கடலில் பல அதிசய உயிரினங்கள் வாழ்கின்றன. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வினோத தன்மைகள் இருக்கும். அப்படி வினோதமான உயிரினம்தான் பஃபர் மீன் (Puffer Fish). ஆபத்தை எதிர்கொள்ளும்போது தன்னைத் தற்காத்துக்கொள்ளும் விதமாக தன் உடலைப் பல மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் திறன்கொண்ட இந்த மீன், தனது வித்தியாசமான தோற்றம் காரணமாக சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளது. இது வேட்டையாடுபவர்களை பயமுறுத்தி ஓடிவிட வைக்கும். மேலும், அவற்றின் தோல் முட்கள் நிறைந்ததாக இருப்பதால், இது மற்ற உயிரினங்களை தாக்கி காயப்படுத்தும். பஃபர் மீன்கள் தங்கள் உடலைப் பல மடங்கு பெரிதாக்கிக்கொள்ளும் திறனுக்குக் காரணம் அவற்றின் உடலில் உள்ள நீர் நிரப்பப்பட்ட பைகள்தான். பொதுவாக, இவை கோள வடிவிலும், பல்வேறு வண்ணங்களிலும் காணப்படுகின்றன. சில பஃபர் மீன்கள் மிகவும் பிரகாசமான நிறங்களில் இருப்பதால் கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் அழகான ஒன்றாக அமைந்து விடுகிறது.

இந்த மீன்களின் உடலில் டெட்ரோடாக்சின் என்ற மிகவும் வலிமையான நச்சுப் பொருள் உள்ளது. சிறிய அளவு நச்சு கூட மனிதனை உடனடியாக கொல்லும் திறன்கொண்டது. பஃபர் மீன்கள் பாசிகள், சிறு மீன்கள், இறால் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்ளுகின்றன. சில இனங்கள் கடற்பாசி மற்றும் கடற்புற்களை உண்ணும் தன்மை கொண்டவை. உலகின் அனைத்து கடல்களிலும் இந்த மீன்கள் காணப்படுகின்றன. ஆழ் கடல், பவளப்பாறைகள், கடற்கரைப் பகுதிகள் என பல்வேறு வாழிடங்களில் இவை வாழ்கின்றன.