மதுரை: புதுக்கோட்டையில் குழந்தைகள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ரேஷன் கடை கட்ட தடை கோரி மனு விசாரணையில், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு வகை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விதிகளை மீறி அனுமதி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், பூங்கா நிலத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்த நிலையில், மாநகராட்சியின் அறிக்கையை ஏற்று வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது . புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
+
Advertisement 
 
 
 
   