புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்த ஒன்றியக் குழு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழு திருச்சியில் ஆய்வு செய்யவிருந்த நிலையில் நாமக்கல் புறப்பட்டு சென்றனர். தஞ்சை, மயிலாடுதுறையில் ஆய்வு செய்யவிருந்த மற்றொரு ஒன்றியக் குழு கோவை புறப்பட்டு சென்றனர். ஒன்றியக் குழு இன்று நாமக்கல் செல்வதால் நாளை புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
+
Advertisement
