புதுச்சேரி : சென்னையில் தவறான சிகிச்சையால் ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு புதுச்சேரி இந்திய கம்யூ. நன்றி தெரிவித்தது. உடன் பருமனை குறைக்க ஐ.டி. பொறியியல் பட்டதாரி ஹேமச்சந்திரன் மருத்துவரை அணுகியுள்ளார். பக்க விளைவுகள் இல்லை என்று கூறி மருத்துவர் பெருங்கோ அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தார். அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து அதிகமாக கொடுத்ததால் ஹேமச்சந்திரன் இறந்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர் பெருங்கோ, மயக்கவியல் மருத்துவர் நேசமணியின் மருத்துவ பதிவு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இருவரின் மருத்துவ பதிவை 3 மாதம் ரத்து செய்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டது.
+
Advertisement