Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புதுச்சேரி வானொலியில் பகுதி நேர பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி : புதுச்சேரி ஆகாஷ் வாணி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆகாஷ்வாணி புதுச்சேரி முதன்மை அலைவரிசை மற்றும் எப்எம் ரெயின்போ அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, பகுதி நேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

பகுதி நேர அறிவிப்பாளராக பணிபுரிய வயது வரம்பு 20 முதல் 50 வரையிலும், பகுதி நேர ஆர்ஜேவாக பணிபுரிய 20 முதல் 40 வரையிலும், இளைய பாரத நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக, படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளிலும், திருவண்ணாமலை வட்டத்திலும் வசிப்பவராக இருக்க வேண்டும்.

நல்ல குரல் வளமும், தெளிவான உச்சரிப்பும், ஒலிபரப்பில் ஆர்வமும், பொது அறிவுத்திறன் பெற்றவராகவும் இருத்தல் அவசியம். எழுத்து தேர்வு, குரல் தேர்வு, நேர்முக தேர்வு ஆகிய மூன்று அடுக்க தேர்வு முறையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகள் அனைத்தும் தற்காலிகமானவையே. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சிகளின் தேவைக்கேற்ப பகுதி நேர பணிக்கு அவ்வப்போது, அதிகபட்சமாக மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.354, ஆதிதிராவிடர், பழங்குடியினர் (எஸ்சி, எஸ்டி) வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ.266, இளைய பாரத நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களுக்கு ரூ.118, நெப்ட் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்.30ம் தேதி ஆகும். விண்ணப்ப படிவங்களை அலுவலக நேரங்களில் வந்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிகழ்ச்சி பிரிவு தலைவர், ஆகாஷ்வாணி புதுச்சேரி, இந்திரா நகர், கோரிமேடு புதுச்சேரி-605006 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.