புதுச்சேரியில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் குறைக்கப்பட்ட நெய், பனீர் விலையை மீண்டும் உயர்த்தியது அரசு பான்லே நிறுவனம்
புதுச்சேரியில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் குறைக்கப்பட்ட நெய், பனீர் விலையை அரசு பான்லே நிறுவனம் மீண்டும் உயர்த்தியது. ஜிஎஸ்டி குறைப்பால் புதுச்சேரி அரசு நிறுவனமான பான்லேவின் நெய் விலை லிட்டர் ரூ.700லிருந்து ரூ.655ஆக குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் நெய் விலை ரூ.655லிருந்து ரூ.740ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிச் சலுகையால் பனீர் 100 கிராம் ரூ.50லிருந்து ரூ.48ஆக குறைக்கப்பட்டது. தற்போது 100 கிராம் பனீர் ரூ.48லிருந்து ரூ.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


