Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் காய், கனி மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று மாலை துவங்குகிறது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர்.

கண்காட்சி இன்று (9ம் தேதி) முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 10, 11ம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில் 40 ஆயிரம் வகையான மலர், காய், கனிகள் வைக்கப்படவுள்ளது. மேலும், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் அரங்குகள், வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்குகள், தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், உற்பத்தியாளர்களின் விற்பனை அரங்குகள், சிறுவர் உல்லாச ரயில், இசை நடன நீருற்று போன்றவை இடம் பெற்றுள்ளது அங்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

மூலிகை தாவரங்கள் அரங்கு மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியில், புதுச்சேரி மூலிகை தாவர வாரியம் சார்பாக கண்காட்சி அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயிரிடக்கூடிய மூலிகைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துதல் போன்ற விவரங்கள் வழங்கப்படுகிறது. குறுகிய காலத்தில், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய அஸ்வகந்தா (அமுக்கிரா) மூலிகை சாகுபடி குறித்த தகவல்கள் மற்றும் விளக்க கையேடுகள் வழங்கப்படுகிறது.