மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய அபிராமிபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடுகாட்டுக்கு பொது வழி கிடையாது என்று தெரிகிறது. இதன்காரணமாக பல ஆண்டுகளாக தனி நபர் இடத்தை பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அந்த பாதையை வீட்டுமனைகளாக பிரித்துவிட்டதால் இடுகாட்டுக்கு பொது பாதை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆதிலட்சுமி என்பவரின் உடலை எடுத்துச்செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து அபிராமபுரம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் மதுராந்தகம், எல்.எண்டத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் வந்து சமாதானப்படுத்தினர். இதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது.


