சென்னை : நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாநில கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி நடைமுறை தொடரும் என்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
+
Advertisement