Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி: ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்திய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என் நிறுவனத்தின் 4ஜி சேவையை ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜார்சுகுடா மாவட்டத்தில் ரூ.60,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உயர்கல்வி, தொலைதொடர்பு, ரயில்வே துறைகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டென்மார்க், ஸ்வீடன், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் பட்டியலில் இந்தியா 5வது நாடாக இணைந்துள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 97,500 தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை பிஎஸ்என்எல் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 180 4ஜி வலைபின்னல் கோபுரங்களையும் மோடி திறந்துவைத்துள்ளார். இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் 120 கோடி வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக இன்று இந்தியா உருவெடுத்துள்ளது. இதனால், 5ஜி சேவையையும் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ள 97500 செல்போன் கோபுரங்களில் 92,600க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதனை எளிதாக 5ஜி சேவைக்கு மேம்படுத்தலாம். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட 4ஜி கோபுரங்களை நிறுவியுள்ளன. 14,180 4ஜி கோபுரங்கள் எண்ம பாரத நிதியின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நாடு முழுவதும் 8 ஐஐடிக்களின் விரிவாக்கத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சம்பல்பூர் நகரில் ரூ.273 கோடி செலவில் கட்டப்பட்ட 5 கிலோ மீட்டர் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

அடுத்த 4 ஆண்டில் 8 ஐஐடிக்களில் புதிதாக 10,000 மாணவர்களை சேர்க்கும் வகையில் விரிவுபடுத்த திட்டம்

அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து ரூ.1,400 கோடி ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.