அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிமுறைகள்.. விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்: ஐகோர்ட் கிளை!
மதுரை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கும் முன் வழிமுறைகளை வகுக்கக் கோரிய மனு மீதான விசாரணையில், அனைத்து மனுக்களையும் 2 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும். 2 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்ட பின், அனைத்து மனுக்களும் ஒன்றாக விசாரிக்கப்படும் என தெரிவித்த ஐகோர்ட் கிளை, அனைத்து மனுக்களையும் முதன்மை அமர்வுக்கு மாற்றி விசாரணையை ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குமரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.