லடாக்: லடாக், லே பகுதியில் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி போராட்டம் நடத்தவோ, ஒன்று கூடவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். லடாக்கின் லே பகுதியில் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது., லே பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க மாவட்ட ஆட்சியர் 163 தடை உத்தரவு பிறப்பித்தார். லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. லேவில் உள்ள பாஜக அலுவலகம், காவல் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். லடாக்கின் லே பகுதியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் காயம் அடைந்த 70க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
+
Advertisement