அனுமதியின்றி போராட்டம் நடத்திய அன்புமணி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார் அடுத்த வாரம் ஆஜராக சம்மன்
நெல்லை: நெல்லை மாவட்டம் சிந்து பூந்துறையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் அடுத்த வாரம் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த உரிமையை மீட்க தலைமுறையை காக்க என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் நெல்லை சென்றிருந்தார்.
அங்கு கூடியிருந்த கட்சியினரும் பொதுமக்களும் தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பியதைத் தொடர்ந்து, திடீரென அன்புமணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அப்போது நதியில் கலக்கும் கழிவுநீர் மற்றும் அதன் தாக்கங்களை நேரடியாக ஆய்வு செய்தார். அங்கு கூடியிருந்த கட்சியினரும் பொதுமக்களும் தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பியதைத் தொடர்ந்து, திடீரென அன்புமணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அன்புமணி உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக நெல்லை ஜங்ஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக அன்புமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
