திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குடியிருப்பில் அமரேஷ் பிரசாத் (35) என்பவர் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இறப்புக்கு நீதி கோரி 1000த்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதை அடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர்.
+
Advertisement