குஜராத் நட்சத்திர ஓட்டலில் விபசாரம்; தாய்லாந்து அழகிகள் 13 பேர் மீட்பு: வாடிக்கையாளரிடம் ரூ.5000 வசூல்
சூரத்: சூரத் நட்சத்திர ஓட்டலில் இயங்கி வந்த மிகப்பெரிய விபசார கும்பலை காவல்துறையினர் கைது செய்து, 13 தாய்லாந்து அழகிகளை மீட்டனர். குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஜஹாங்கீர்புரா பகுதியில் உள்ள பார்க் பெவிலியன் என்ற நட்சத்திர ஓட்டலில் மிகப்பெரிய விபசார கும்பல் ஒன்று இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில், காவல்துறையினர் அந்த ஓட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 அழகிகளை மீட்டனர். மேலும், இந்த கும்பலைச் சேர்ந்த ஓட்டல் மேலாளர் உள்ளிட்ட 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபசார கும்பலின் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.