சென்னை: விடுதிகளுக்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான ஹாஸ்டல்களுக்கு சொத்து வரி செலுத்த மாநகராட்சி உத்தரவிட்டது. சென்னை, கோவை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி ஹாஸ்டல் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; சென்னை, கோவை மாநகராட்சிகள் சார்பில் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தது நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லாதவர்கள்தான் ஹாஸ்டல்களில் தங்குகின்றனர். ஹாஸ்டல்கள் குடியிருப்பு கட்டடங்களே தவிர, வணிக கட்டடங்களாக கருத முடியாது. ஹாஸ்டல்களுக்கு குடியிருப்பு கட்டடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
