Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரோ கபடி லீக் பைனலில் புனேரி-டெல்லி இன்று பலப்பரீட்சை

புதுடெல்லி: 12வது புரோ கபடி லீக் தொடர் கிளைமாக்சை எட்டி உள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் புனேரி பால்டன்- தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் முதல் 2 இ்டங்களை பிடித்த சம பலம் வாய்ந்த அணிகள் மோதுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதிய 3 போட்டியும் சமனில் முடிந்தது. டைப்ரேக்கரில் டெல்லி 2, புனேரி 1ல் வென்றன. இதற்கு முன் புனேரி 2023, டெல்லி 2022ல் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் இன்று 2வது முறையாக பட்டம் வெல்ல போராடும்.

இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3கோடி, ரன்னருக்கு ரூ.1.8 கோடி பரிசாக வழங்கப்படும். இரு அணிகளும் இதற்கு முன் 27 முறை மோதி உள்ளன. இதில் 11ல் டெல்லி, 13ல் புனேரி வென்றுள்ளன. 3 போட்டி டையில் முடிந்துள்ளது.