சென்னை: புரோ கபடி லீக் போட்டியின் 12வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் ஆக.29ம் தேதி தொடங்கிய இந்த சீசனின் பிளே ஆப், இறுதி ஆட்டங்கள் புது டெல்லியில் நடந்து வருகின்றன. புரோ கபடியில் அறிமுகமாகிய ‘சூப்பர் டேகிள், சூப்பர் ரெய்டு, போனஸ், டூ ஆர் டை’ போன்ற விதிமுறைகள் இப்போது சர்வதேச கபடி விதிகளாக மாறிவிட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டு புரோ கபடியில் மேலும் பல புதிய விதிகள் அறிமுகமாகி இருக்கின்றன. அதில் கால்பந்து விளையாட்டில் டிரா ‘பெனால்டி ஷூட் அவுட் கோல்’ அதிலும் தீர்வு காணாவிட்டால் ‘கோல்டன் கோல்’ போன்று புரோ கபடியிலும் ஆட்டத்தின் முடிவை எட்ட அறிமுகமான ‘டை பிரேக்கர் (5சூப்பர் ரெய்ட்), கோல்டன் ரெய்ட்’ ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
