புதுடெல்லி: 12 அணிகள் பங்கேற்று உள்ள 12வது புரோ கபடி லீக் தொடரில் 4வது கட்ட போட்டிகள் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ் எதிராக போட்டியில் 42-32 என்ற புள்ளி கணக்கில் தமிழ்தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
இதுவரை விளையாடிய 16 போட்டியில் 10 தோல்வியை சந்தித்து தமிழ்தலைவாஸ் அணி 12 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் சுற்றை தமிழ்தலைவாஸ் அணி பறிகொடுத்தது. இன்று டெல்லியுடனும், 21ம் தேதி பெங்காலுடனும் தமிழ்தலைவாஸ் மோதுகிறது. இந்த 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.