Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பேராசிரியர் தி.இராசகோபாலன் எழுதிய ‘கலைஞரின் பேனா’ நூலை முதல்வர் வெளியிட்டார்

சென்னை: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் ராசகோபலன், முரசொலி செல்வத்தின் வகுப்பு தோழர் திராவிடர் மாணவ முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். அவர் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் ஆய்வு மைய கூட்டங்களை சிறப்பாக நடத்துகின்ற பாங்கினை கலைஞர் பாராட்டியுள்ளார். கலைஞரின் ஆட்சித்திற ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள் முதலியவற்றை குறித்து இந்நூலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். கலைஞர் தொண்டால் தொட்டவர்கள் உண்டு;

அவரை கலையால் தொட்டவர்கள் உண்டு; ஆனால், கலைஞருடைய பேனாவைத் தொட்டு, அவரது நெஞ்சைத் தொட்டவர் நூலாசிரியர். ‘கலைஞருடைய எழுத்துக்கள் எனக்கு பிராணவாயுவாகி போனதால், அவற்றை பதிவு பண்ணும் ஒலிப்பதிவு கருவியானேன்’ என்கிறார் நூலாசிரியர். இந்நூலில், கலைஞர் தம் வாழ்நாளில் நேரம் காலம் இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தார்; அதனால்தான் அவருடைய எழுத்துக்கள் நேரம் காலம் இன்றி வாழ்கின்றன என்றும், பண்டித ஜவகர்லால் நேரு, ராபர்ட் ப்ராஸ்ட்டினுடைய கவிதையை எழுதி தம் மேஜை மீது வைத்திருந்தார்.

ஆனால், கியூபாவின் அதிபர் பெடல் காஸ்ட்ரோ 20.1.2006 அன்று கலைஞர் எழுதிக் கொடுத்த கவிதையை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்து தம் மேஜையின் மீது வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். உலகத்து கவிஞர்களின் எழுத்துக்களோடு கலைஞரின் எழுத்துக்களை ஒப்பிட்டால், மற்றவர்களுடைய எழுத்துக்கள் மலையடிவாரத்தில் நடக்கின்றன. ஆனால், கலைஞரின் எழுத்துக்கள் மலையின் சிகரத்தில் உயர்ந்து நிற்கின்றன என்றும், கலைஞருடைய நாவும் பேனாவும் ஒரே உறையில் கிடக்கும் 2 வாள்கள்.

கலைஞர் தம்முடைய எழுத்துப்பணியை புதுச்சேரியில் இருந்து வெளிவந்த பத்திரிகையில் தொடங்கினார். அந்த முதல் கட்டுரைக்கு ‘அந்தப் பேனா’ என பெயரிட்டிருந்தார். அதனால் இந்த நூலுக்கு ‘கலைஞரின் பேனா’ என தலைப்பிடப்பட்டதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ அன்னியூர் சிவா, இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை குழு உறுப்பினர் சுகிசிவம், கற்பகம் புத்தகாலயத்தின் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.