புதுடெல்லி: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த போட்டிகளில் பாட்னா 61-26 என டெல்லியையும், பெங்களூரு புல்ஸ் 54-24 என பெங்காலையும், அரியானா 45-34 என தெலுங்கு டைட்டன்சையும் வீழ்த்தின. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ், 8.30 மணிக்கு யுபி யோத்தா- யு மும்பா, 9.30 மணிக்கு பாட்னா-ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன.
பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த புனேரி, டெல்லி நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. பெங்களூரு, தெலுங்கு, அரியானா, யு மும்பா, ஜெய்ப்பூர் பிளே ஆப்பிற்குள் நுழைந்துவிட்டன. கடைசி அணியாக பாட்னா தகுதிபெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி இன்று வெற்றி பெறாவிட்டாலும் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடையாமல் இருந்தாலே வாய்ப்பு கிடைக்கும்.