விசாகப்பட்டினம்: 12வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 15வது லீக் போட்டியில் யு மும்பா 48-28 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், அரியானா ஸ்டீலர்ஸ்-யு.பி. யோத்தா மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய யு.பி. யோத்தா 17-12 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் அரியானா அதிரடியாக புள்ளிகளை குவித்தது.
அந்த அணி 25 புள்ளிகளை எடுக்க யு.பி. யோத்தாவால் 15 புள்ளிகளை தான் எடுக்க முடிந்தது. இதனால் 37-32 என்ற புள்ளி கணக்கில் அரியானா வெற்றி பெற்றது. இன்று இரவு 8 மணிக்கு பாட்னா பைரேட்ஸ்-பெங்களூரு புல்ஸ் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு தமிழ்தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்திய தமிழ்தலைவாஸ், 2வது போட்டியில் யு மும்பாவிடம் வீழ்ந்தது. இன்று 2வது வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.