Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு-தமிழ்தலைவாஸ் இன்று பலப்பரீட்சை

ஜெய்ப்பூர்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 33வது லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் 40-37 என குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் தெலுங்கு 14-11 என முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 2வது பாதியில் பெங்களூரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 புள்ளியை குவித்தது. தெலுங்கு 18 புள்ளிகள் எடுத்தது. முடிவில் 34-32 என பெங்களூருபுல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

இன்று இரவு 8 மணிக்கு யு.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ், இரவு 9 மணிக்கு தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் மோதுகின்றன. 4 போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வி என 8வது இடத்தில் உள்ள தமிழ்தலைவாஸ் இன்று 3வது வெற்றிக்காக களம் காண்கிறது. பெங்களூரு 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 16 முறை மோதியதில் 12ல் பெங்களூரு, 4ல் தமிழ்தலைவாஸ் வென்றுள்ளன.