விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடிலீக் தொடர் போட்டிகளில் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 19வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் 44-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், தபாங் டெல்லி-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் முதல் பாதியில், 20-15 என முன்னிலை வகித்தது.
2வது பாதியில் கடைசி ரெய்டு வரை அந்த அணி ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தது. டெல்லி அணியின் 3பேர் மட்டுமே களத்தில் இருந்த நேரத்தில் கடைசி ரெய்டு சென்ற ஜெய்ப்பூரின் நிதின்குமார் வெள்ளை கோட்டை தாண்டாமல் ஓடிவந்துவிட்டார். இதனால் சூப்பர் டேக்கிளாக 2 புள்ளிபெற்ற டெல்லி 36-35 என த்ரில் வெற்றிபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு அரியானா-பெங்களூரு, இரவு 9 மணிக்கு புனேரிபால்டன்-பாட்னா மோதுகின்றன.