உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவம் வெட்கக் கேடானது. தலைமை நீதிபதி மீது காலணி வீசியது, ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பி.ஆர்.கவாய் மீதான காலணி வீச்சு சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.