Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை உயர்வு

சென்னை: தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இதில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை விலையில்லா புத்தகங்களாக தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 - 40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 - 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40 - ரூ.70 வரையும், 9 - 12 வகுப்பு புத்தகங்கள் ரூ.50 - 80 வரையும் உயர்வு. ஒருசில புத்தகங்கள் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, 1-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550-க்கு விற்பனையாகிறது. 2-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530-க்கு விற்பனையாகிறது.

3-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620-க்கு விற்பனையாகிறது. 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650-க்கு விற்பனையாகிறது. 5-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனையாகிறது. 6-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200 விற்பனையாகிறது.

8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000 உயர்ந்துள்ளது. 9-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 10-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1,130க்கு விற்பனையாகிறது. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.