சென்னை: சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பேருந்து ஒன்று பெங்களூருவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், பேருந்து பள்ளிகொண்டா அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தில் இருந்து புகை வெளிவந்தது. இதனைக்கண்ட பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பேருந்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேறினர். இதனிடையே பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
நல்வாய்ப்பாகப் பேருந்திலிருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோதிலும் பேருந்து முழுமையாகத் தீயில் கருகி நாசம்.
தனியார் பேருந்து நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.