புதுடெல்லி: கைதிகளுக்கு தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொலைவில் இருந்தபடி சுகாதார சேவைகள் (டெலி மருத்துவம்) கிடைக்கச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
‘‘சிறைகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைப்பதன் மூலம் கைதிகள் மருத்துவமனைகளுக்கு நேரடியாக செல்லாமல், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையை பெற முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என சுற்றறிக்கையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


