விருதுநகர்: கைதி தப்பியோடியது தொடர்பாக எஸ்.எஸ்.ஐ., காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருட்டு வழக்கில் கேரள சிறையில் இருந்த கைதி பாலமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்துள்ளனர். அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்து சென்றபோது கைதி பாலமுருகன் தப்பியோடியுள்ளார். கைதி பாலமுருகன் தப்பியோடியது தொடர்பாக எஸ்.எஸ்.ஐ. நாகராஜன், காவலர்கள் ரவிஜோதி, சுதாகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
+
Advertisement
