நெல்லை: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மத்தை சேர்ந்த வினோத்குமார் (30). 2019ல் 15 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வந்த அவர், நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி அனைத்து மகளிர் போலீசார் வினோத்குமாரை கைது செய்து கடந்த மாதம் 29ம் தேதி ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கின் தீர்ப்பு இரண்டு மாதங்களில் வரவுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் பாளை. மத்திய சிறையிலுள்ள கழிவறை ஜன்னலில் நேற்று துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.