வாஷிங்டன்: பிரதமர் மோடி தனது நண்பர் என்று புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம், ‘இந்தியாவுக்குச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஆம், அதற்கான வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என் நண்பர், நாங்கள் தொடர்ந்து பேசிக்கொள்கிறோம்’ நான் இந்தியா வருவதற்கு அவர் விரும்புகிறார். நான் செல்வேன். பிரதமர் மோடியுடன் நான் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொள்வேன். பெரும்பாலும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை பிரதமர் மோடி நிறுத்திவிட்டார். இது மிகவும் நல்லது. நன்றாக நடக்கிறது” என்றார். அடுத்தாண்டு புதுடெல்லியில் நடைபெற உள்ள ‘குவாட்’ மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க தலைவர்களை இந்தியா அழைக்கும்.
+
Advertisement

