புதுடெல்லி: பிரதமர் மோடி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய நட்பு நாடுகளுடன் உறவை அதிகரிக்கும் வகையில் டிச.15 முதல் முதல் டிச. 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் மோடி, மன்னர் 2ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பின் பேரில், டிசம்பர் 15-16 தேதிகளில் ஜோர்டான் செல்கிறார். அதை தொடர்ந்து எத்தியோப்பியப் பிரதமர் டாக்டர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில், டிசம்பர் 16-17 தேதிகளில் எத்தியோப்பியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். எத்தியோப்பியாவுக்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாகும். பின்னர், பிரதமர் மோடி, டிசம்பர் 17-18 தேதிகளில் ஓமன் செல்கிறார்.
+
Advertisement


