Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரதமர் ரேஞ்சுக்கு டெய்லி வீடியோ அறிக்கை வெளியிடும் இலைக்கட்சி மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காக்கி டிரஸ்க்கான பணிகளை கவனிப்பதைவிட ரியல் எஸ்டேட் பிசினஸை ரொம்பவே சுறுசுறுப்பாக செய்றதா த்ரி ஸ்டார் காக்கி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் வந்தா வாசி காக்கிகள் உட்கோட்டத்துக்கு உட்பட்ட 3 எழுத்து காக்கிகள் நிலையத்துல த்ரி ஸ்டார் காக்கி பணிபுரிஞ்சு வர்றாராம்.. குணமான பெயர் கொண்ட இவரு, காக்கிகள் நிலைய பணிகளை செய்யாம, ரியல் எஸ்டேட் பணியை சிறப்பாக செய்து வர்றதாக புகார்கள் எழுந்திருக்குது..

கிரிவலம், விழு புரம் மாவட்டத்தோட எல்லையில தெள் ஆறு செக்போஸ்ட் பகுதியில சில ஏக்கர்களை கொண்டு, நண்பர்கள் மூலமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வர்றாராம்.. துறை ரீதியான பணிகளை செய்றதுல சுணக்கம் காட்டி வர்ற இவரு, இதுபோன்ற வேலைகள ஜோரா செய்றாராம்.. அதுமட்டுமில்லாம, மலர் பார்ட்டியைச் சேர்ந்த நபரோட வாகனம் மூலம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையும் நல்லா போகுதாம்.. அதோட காக்கிகள் நிலைய லிமிட்டுக்கு உட்பட்ட பகுதிகள்ல மணல் கடத்தல்லயும், மாதம் ஒரு எல் வரைக்கும் தேத்திடுறாராம்..

வாசி உட்கோட்டம் முழுவதும் இந்த ஸ்டார் காக்கியோட பொறுப்பான வேலை பற்றித்தான் பரவலாக பரபரப்பா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் நெருங்குவதால் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களிடம் ரொம்பவே கனிவாக நடந்துக்கிறாராமே மற்றொரு மாஜியான மணியானவர் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி மாஜி அமைச்சர் மணியானவருக்கும் மற்றொரு மாஜி அமைச்சருக்கும் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்து வந்தது.

தற்போது, பனிப்போர் முடிவுக்கு வருவது போல், மாயதோற்றத்தை முக்கிய மாஜி அமைச்சர் உருவாக்கி வருகிறாராம்.. இதன் மூலம் இருவருக்கும் இடையே எவ்வித சலசலப்பும் இல்லை என்பதை தலைமைக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் மாஜி அமைச்சர் முடிவு செய்து காய்நகர்த்தி வருகிறாராம்.. முக்கியமாக, மாஜி அமைச்சரின் பெயரை கூட்டங்களில் சொல்ல தொடங்கிட்டாராம்.. அவரோட ஆதரவாளர்களிடமும் மணியானவர் ரொம்பவே கனிவாக நடந்து கொள்கிறதா காட்டிக்கிடுறாராம்..

தேர்தல் நெருங்குவதால் இந்த வேலையில் அவர் இறங்கியுள்ளதாக கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெய்லி வீடியோ வெளியிட்டு டார்ச்சர் செய்றதா முன்னாள் மாஜியானவர் மீது கடும் அதிருப்தியில் சக கட்சி நிர்வாகிகளே புலம்பி தவிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து இலைக்கட்சியினர் மூன்று கோஷ்டிகளாக இயங்குவது ஊரறிந்த விஷயம் தான் என்றாலும், அதில் யார் பெரியவர் என்பதுதான் ஹைலட்டே..

செல்லூர்க்காரர், உதயமானவர் மற்றும் செல்லமானவர் ஆகியோர் பிரதான அணிகளாக இருந்து ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதைப்போல அரசியல் செய்து வர்றாங்க.. இவர்களில் சேலத்துக்காரரின் ஆதரவு கொஞ்சம் கூடுதலாக உதயமானவருக்குதான் இருக்கிறதாம்.. மற்றவர்களுக்கு அடுத்தடுத்த நிலைதானாம்.. இப்படிப்பட்ட சூழலில் உதயமானவருக்கு சட்டமன்றத்தில் சேலத்துக்காரருக்கு அடுத்த நிலை கிடைத்ததில் இருந்து, தன்னையும் கட்சியில் முக்கிய தலைவராகவே நினைத்து செயல்படுகிறாராம்..

ஆரம்பத்தில் தினசரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க தொடங்கியவர், பின்னர் அதை அறிக்கையாக மாற்றினார். இதை தாண்டி தற்ேபாது தினமும் வீடியோ அறிக்கையை வெளியிட்டு வருகிறாராம்.. கட்சி தலைமையே தினமும் அறிக்கை விடாத நிலையில், உதயமானவரோ நாள் தவறாமல் வீடியோ அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.. இதுதான் தற்போது மாஜி அமைச்சரான செல்லூர்க்காரர், எம்எல்ஏவான செல்லமானவர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டுமின்றி, தொண்டர்களையும் ரொம்பவே எரிச்சலையடைய செய்துள்ளதாம்..

‘பிரதமர் கூட எப்போதாவது தான் வீடியோவில் வந்து பேசுறாரு... இவர் என்னப்பா டெய்லி வீடியோ விட்டுட்டு டார்ச்சர் பண்றாரு... இதற்கு யாராவது எண்ட் கார்டு போடுங்கப்பா.. தாங்க முடியலை..’’ என சக கட்சி நிர்வாகிகளே புலம்பி வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எப்படியாவது தங்கள் வலைக்குள் இழுத்துவிட வேண்டும் என்று விசிறிகளை உசுப்பேத்தி விடுறாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கரூர் துயர சம்பவத்தை பயன்படுத்தி நடிகரை தங்கள் வலையில் சிக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இலையின் தலைமை ஜரூராக செஞ்சிக்கிட்டு இருக்காம்.. நடிகர் கட்சி ஆரம்பித்த புதிதில் இதற்கான வேலைகள் ஒருபுறம் நடந்ததாம்.. ஆனால் நான்தான் சீப்-மினிஸ்டர் என்று எகத்தாளத்தின் உச்சத்தில் இருந்த நடிகரு, இலையை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லையாம்.. சேலத்துக்காரரின் சொந்த ஊரில் கூட, நடிகரின் பார்ட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை நிழலானவரு அடிக்கடி சந்திச்சு பேசினாராம்..

ஆனால் இது எதுவுமே கைகூடவில்லையாம்.. இந்த நேரத்தில் தான், கரூர் கோரம் நடிகரின் மொத்த இமேஜையும் டேமேஜ் ஆக்கி இருக்காம்.. ஆனால் இலையின் தலைமையோ, இதுதான் நமக்கு சரியான சந்தர்ப்பம் என்று வலையை வீசி இருக்காம்.. அதுவும் கட்டாயமாக போய் நடிகர் கட்சி நிர்வாகிகளிடம் நட்பு பாராட்டுறாங்களாம்.. இது மட்டுமின்றி இனிமேல் எப்படி கூட்டம் நடத்தணும், என்னென்ன ஏற்பாடுகள் செய்யணும், கூட்டத்தை எப்படி ஒருங்கிணைக்கணும் என்று விசிறிகளுக்கு இலையின் மூத்த நிர்வாகிகள் சிலரே ஐடியாக்களை வேறு அள்ளி விட்டுக்கிட்டு இருக்காங்களாம்..

எல்லாத்துக்கும் நாங்க இருக்கோம்.. நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க.. நாங்க பார்க்காத பொலிடிக்கலா என்பதுடன் இதையெல்லாம் தம்பி கிட்ட நீங்க எடுத்துச் சொல்லுங்க என்று அடிச்சி விடுறாங்களாம்.. மொத்தத்தில் எப்படியாவது நடிகரை தங்கள் வலைக்குள் கொண்டு வரவேண்டும் என்பதுதான், இப்போது இலையின் முக்கிய திட்டமாக இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.