Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

மேற்குவங்கம்: பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் மோடிக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கட்டாயம் தேவை என்றும் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி காளிகாட்டில் செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘நாட்டின் மக்கள் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை கொடுக்கவில்லை. பிரதமருக்கு பெரும்பான்மை மதிப்பெண் கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வளவு அட்டூழியங்கள் செய்த பிறகும், இவ்வளவு பணம் செலவழித்த பிறகும், மோடி மற்றும் அமித்ஷாவின் வியூகம் தோற்றுவிட்டது. அயோத்தியிலும் அவர்கள் தோற்றுவிட்டார்கள். இந்தியா வென்றது. மோடி தோற்றுவிட்டார்.

அகிலேஷ் லதாவிடம் பேசி வாழ்த்து தெரிவித்தேன். பல இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் கட்சி வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று அகிலேஷ் என்னிடம் கூறினார்" எனத் தெரிவித்தார்.